மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி படகுகளும் மீட்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் கூறியுள்ளதாவது: இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நன்றியும், பாராட்டுகளும். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் படகுகளும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசிடம் பேசி அந்நாட்டு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் ஒன்றிய அரசு மீட்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும், இந்தியா - இலங்கை ஐந்தாவது கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைந்து நடத்தவும் ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: