குட்டத்துப்பட்டி ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகே தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்: பெருமாள்நகர் மக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி: குட்டத்துப்பட்டி ஊராட்சி பெருமாள்நகரில் தண்ணீர் தொட்டி அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில், குட்டத்துப்பட்டி, குட்டத்துஆவாராம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, நாச்சகோனான்பட்டி, புளியராஜக்காபட்டி, காலாடிபட்டி, உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குட்டத்துப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரில் பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக சிறுமின்விசை தண்ணீர் தொட்டி அமைத்துக கொடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் தண்ணீர் பிடிக்க வரும் பெண்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன்கருதி அப்பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: