தியாகதுருகம் அருகே சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மின்சார வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியான தியாகதுருகம் முதல் பல்லகச்சேரி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பிகள் சாலையில் தாழ்வாக செல்வதால் கரும்பு லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கிறது. மேலும் மின் விபத்து ஏற்படும் அபாயமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து ஒரு மாதத்துக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் சம்மந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்காமல் சேதமடைந்த கம்பத்தில் சிமெண்ட் கலவையை கொட்டி மின்சார ஊழியர்கள் சீரமைத்தனர். சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படாததால் தொடர்ந்து மின்கம்பிகள் சாலையில் தாழ்வாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்புகளை டிராக்டரில் ஏற்றிச் செல்லும் போது மின் விபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு உயிர்சேதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நிலையில் உள்ள 2 மின்கம்பத்தையும் மாற்றியமைக்கும் விதமாக உயரமான மின்கம்பங்கள் அமைத்திட மாவட்ட மின்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: