சேதமடைந்த பாலத்தை சரிசெய்த அதிகாரிகள்-மக்கள் மகிழ்ச்சி

காரைக்கால் : காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி அருகே மணல் ஏற்றிச் சென்ற லாரிகளால் பாலம் சேதமடைந்ததாக லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வரை லாரிகளை விடுவிக்கப்போவதில்லை என கிராம மக்கள் உறுதியாக நின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரனில் செய்தி வெளியிடபட்டது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் நேற்று களத்தில் இறங்கி சேதமடைந்த பாலத்தை சரி செய்தனர். மேலும் கனகர வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலத்தை சரிசெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: