லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷின் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் கடந்த 1994ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து இதுவரை இதன் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுஇருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொ டக்ஷன் பணிகள் தள்ளிப்போய்விட்டது.