5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடை ஜன.31 வரை நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடை ஜன.31 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக 22-ம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உ.பி. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுவீடாக பிரசாரம் மேற்கொள்வதற்கு 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடை பெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறையாததால் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் , பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கும் , மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும் , கோவாவில் 40 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5 மாநில தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் டிசம்பர் இறுதியில் இருந்து தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்தது. மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டு கள ஆய்வு அடிப்படையில் தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.

Related Stories: