ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

நெல்லை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் தாள் வட்டப் பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டம் 2023ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்த திட்ட திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது.

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் இன்ஜின் சோதனை நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ திட்ட இயக்க மையத்தில் நடந்தது. 25 விநாடிகள் நடந்த இந்த தகுதி சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது விகாஸ் இன்ஜின் செயல்திறன் நிச்சயிக்கப்பட்ட இலக்கை விட சிறப்பாக இருப்பது தெரியவந்தது. இந்த இன்ஜின் சோதனையின் போது அனைத்து பாராமீட்டர்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு எதிர்பார்ப்பின் படி சிறப்பாக செயலாற்றியது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Related Stories: