சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிவு

சென்னை: தங்க விலையில் கடந்த சில மாதமாக ெதாடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.51 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,588க்கும், சவரனுக்கு ரூ.328 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் சவரன் ரூ.408 உயர்ந்தது. இது, நகை வாங்குவோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.

நேற்று காலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,594க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,752க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.37 ஆயிரத்தை நெருங்கி வந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் ‘திடீரென’ குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,572க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது.

Related Stories: