திருமங்கலம் அருகே உடலில் காயங்களுடன் சுற்றிய மயில்கள் மீட்பு

திருமங்கலம் : திருமங்கலம் அருகே காயங்களுடன் சுற்றித்திரியும் இரண்டு மயில்களை மீட்டு வனத்துறையினர் மீட்டு சிகிச்சையளித்தனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான உரப்பனூர், கரடிக்கல், மேலக்கோட்டை, ராயபாளையம், கரிசல்பட்டி, கிழவனேரி, அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

வயல் வெளிகளில் காணப்படும் மயில்கள் சில நேரங்களில் சாலைகளில் மேயவந்து வாகனத்தில் அடிப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று திருமங்கலம் கரடிக்கல் அருகே ஊராண்ட உரப்பனூரில் காயங்களுடன் இரண்டு மயில்கள் சுற்றித் திரிந்தன.இவற்றில் ஒரு மயிலுக்கு காலில் அடிப்பட்டிருந்தது. மற்றொரு மயிலுக்கு உடலில் காயங்கள் காணப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் மயில்களை மீட்க முயன்ற போது அவை பறந்து தப்பிசென்றுவிட்டன. காயமடைந்த மயில்களை வனத்துறையினர் மீட்டு அவற்றிற்கு உரிய சிகிச்சை அளித்தனர்.

Related Stories: