வெளிமாநில கேரட் வருகையால் ஊட்டி கேரட் விலை சரிந்தது

ஊட்டி : டெல்லி மற்றும் ஐதாரபாத் கேரட் வருகையால் மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஊட்டி கேரட் விலை குறைந்துள்ளது. அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் தற்போதும் தேயிலைக்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது.

இதனிடையே கேரட் சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளைய கூடிய கேரட்டிற்கு தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தற்போது ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, கொல்லிமலை, முத்தோரை பாலாடா, இத்தலார், எமரால்டு, அணிக்ெகாரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கேரட் பயிாிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை மேட்டுபாளையம் காய்கறி மண்டியில் கேரட் கிலோவிற்கு ரூ.70 முதல் 80 வரை விலை கிடைத்து வந்தது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இந்த சூழலில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் ஐதாரபாத், டெல்லி கேரட்டுகள் விற்பனைக்காக சென்னை கோயம்பேடு மற்றும் ேமட்டுபாளையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

இதன் காரணமாக ஊட்டி கேரட் விலை சரிந்துள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக ரூ.30 முதல் 50 வரை மட்டுமே விலை போகிறது. தற்போது கேரட் விளைச்சல் குறைந்துள்ள சூழலில், இந்த விலை குறைவால் அறுவடைக்கு தயார் உள்ள கேரட்டை அறுவடை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். சிலர் மேலும் விலை குறைந்து விடுமே என்ற அச்சத்தில் விரைவாக அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: