திருச்சி திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 400 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. திருச்சி திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் முனியாண்டர் கோவிலில் திருவிழா கொண்டாடப்படும். திருவிழாவின் போது சிவன்ராத்திரி அன்று ஜல்லிக்கட்டு போட்டியானது வெகுவிமர்சையாக நடைபெறும். தற்போது கோவிட் தொற்று காலம் என்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு இருப்பதால் இன்று அதற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

தற்போது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியானது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட காளையர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு காளைகளை அடக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். முதல் சுற்றில் அவர்களில் 75 பேர் களத்தில் உள்ளனர். ஏராளமான பொதுமக்கள், அருகில் உள்ள கிராமத்தினர் உள்ளிட்டோர் இந்த ஜல்லிக்கட்டை காண வந்துள்ளனர். முதல் 10 நபர்களுக்கு தங்க நாணயங்களை அவரே நேரடியாக பரிசையும் வழங்க இருக்கிறார். காவல்துறையினர் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி அவர்களுக்கு போடப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்து அவர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து போட்டியானது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 400 காளைகள் இதில் பங்கேற்கும் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்சுற்றில் தற்போது 75 பேர் களத்தில் இறங்கியுள்ளனர். 1 மணிநேரம் முதல் 1.30 மணிநேரம் வரை என்ற மணிக்கணக்கில் அவர்கள் உள்ளே களத்தில் இருப்பார்கள். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதற்குள் 400 காளைகளை அவர்கள் இறக்கிவிடவேண்டும். அதற்குள் இந்த 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் இருப்பார்கள். முதல்சுற்றில் சிறந்து களமாடிய காளையர்களை தேர்ந்தெடுத்து அதன்பிறகு மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு புதிய மாடுபிடி வீரர்களை உள்ளே களத்தில் இறங்குவார்கள். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 3ஆவது ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும்.

Related Stories: