நான் பெண்; நான் போராடுவேன் காங். விளம்பர பெண் பாஜ.வுக்கு திடீர் தாவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தாவல்களும் அதிகமாகி இருக்கின்றன. சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகளான அபர்ணா யாதவ் நேற்று முன்தினம் பாஜ.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, முலாயம் சிங்கின் மைத்துனரும். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ.வுமான பிரமோத் குப்தாவும் நேற்று பாஜ.வில் இணைந்தார். இதேபோல், காங்கிரசின் ‘நான் பெண்; நான் போராடுவேன்’ என்ற இயக்கத்தில் முக்கிய நபராக இடம் பெற்றவர் டாக்டர் பிரியங்கா மவுர்யா. பிரியங்கா காந்தியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் சார்பில் உபி முழுவதும் இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்கும்  மராத்தான் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கான காங்கிரஸ் விளம்பர பேனர்களில் பிரியங்கா மவுர்யாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இம்மாநில தேர்தலில் இவருக்கு காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், நேற்று இவர் பாஜ.வில் இணைந்தார்.

Related Stories: