திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 73,200 அபராதம் வசூல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்த 366 பேரிடம், 73,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக, எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்  நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமையில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே, 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பில், கொரோனா, ஒமிக்ரான் தொற்று குறித்து திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், மைக் மூலம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.இதில், நகர இன்ஸ்பெக்டர் பத்ம பபி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐக்கள் சுரேஷ், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலீசார் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என 366 பேருக்கு தலா 200 வீதம் 73,200 அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: