புதிய சாலை அமைக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.கொளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளந்தோப்பு, ஜாகீர்உசேன் நகர், ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகின்றது. கடந்த 5 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையும் மழை, வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அரித்து செல்லப்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் தெரிவித்தபோது.

கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் பகுதியில் சாலையமைக்க ஒன்றிய நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் அளித்து அதன்பேரில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன. தரமில்லாத சாலையை போடுவதாக ஒன்றிய நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தபோதும் அதனை ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக ஊராட்சி செயலர் மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் என அனைவருக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.

சம்பந்தபட்ட அனைத்து அலுவலர்களும் அலட்சியப்படுத்தியதன் விளைவாக தற்போது சாலைகள் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு சேதமடைந்துள்ள எங்கள் பகுதி சாலைகளை புதிதாக அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Stories: