இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என எப்படி கூற முடியும்? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என எப்படி கூற முடியும்? என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமுதாய உணவகங்களை அமைத்து பட்டினிச் சாவுகளை தடுக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பட்டினிச் சாவுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக நாளிதழில் செய்திகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்த நிலையில்,நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்துள்ளது.

Related Stories: