நாமக்கல் காவல் நிலையங்களில் கட்டபஞ்சாயத்துக்கு அனுமதி இல்லை: எஸ்பி உத்தரவுபடி போர்டுகள் வைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி காவல்நிலையத்தில் குறிப்பிட்ட சிலர் அமர்ந்து கொண்டு கட்டபஞ்சாயத்து செய்வதாக மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூருக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து இது குறித்து எஸ்பி, தனிப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தினர். இதில், காவல்நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் மக்களை குறிப்பிட்ட 4 பேர் போலீசாருடன் அமர்ந்து பேசி கட்டபஞ்சாயத்து செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, கட்ட பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

இதனுடைய தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் கட்டபஞ்சாயத்துக்கு அனுமதி இல்லை என போர்டு எழுதி வைக்கும் படி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நியைலங்களிலும் 3 விதமாக விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகளில், காவல்நிலையங்களில் இடைத்தரகர்கள், கட்டபஞ்சாயத்து செய்பவர்களுக்கு அனுமதி இல்லை. காவல்நிலையத்தில் சிவில் சம்பந்தமான புகார்களை விசாரிக்க மாட்டோம்.

நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடி கொள்ளவும் என எழுதப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையத்துக்கு வரும் அனைத்து குடிமக்களுக்கும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக புகார் அளிக்க உரிமை உள்ளது என எழுதப்பட்டுள்ளது. காவல்நிலையங்களில் எஸ்பி உத்தரவுப்படி தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு போர்டுகள் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: