வைகுண்ட ஏகாதசி பெருவிழா; கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை: பூஜைகளை நேரலையில் பார்க்க ஏற்பாடு

காஞ்சிபுரம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பூஜைகளை நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கேயிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, ஆகம விதிகளின்படி சன்னதிக்கு உள்ளேயே பூஜைகள் மட்டும் நடக்கும். பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை இன்று காலை 6 மணிமுதல் https://youtu.be/nBsmNh1gTjI என்ற இணையதள முகவரியில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: