காவடி ஆட்டத்துடன் பழநிக்கு புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்

தேவகோட்டை: பழநி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வருகின்ற 18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். பல நூற்றாண்டு காலமாக தேவகோட்டையில் இருந்து நகரத்தார்கள் மற்றும் பலரும் காவடிகள் ஏந்தி பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். தேவகோட்டை நகரப்பள்ளிக்கூடத்தில் இருந்து நேற்று மாலை 15 காவடிகள் அரோகரா பாடி புறப்பட்டன.

நகர் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவிலில் வந்தடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை காவடிகள் ஆட்டத்துடன் பழநி பாதயாத்திரை தொடங்கியது. தேவகோட்டை காவடிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இனைந்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.

Related Stories: