நர்ஸ் வேலை வாங்கி தருவதாக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி மோசடி: திருச்சி ஐஜி அலுவலகத்தில் பெண் புகார்

திருச்சி: திருச்சி அடுத்த திருவெறும்பூர் மாரியம்மன் கோயில் தெரு குமரேசபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மார்கிரட் ஜெனிபர் (33), நர்சிங் மாணவியான இவர், கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நேற்று திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில், ஐஜி பாலகிருஷ்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:

ஏற்கனவே அறிமுகமான திருவெறும்பூரை சேர்ந்த லாசர், வீரமலை, சுப்பிரமணி ஆகியோர், கடந்த ஆட்சியில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தங்களுக்கு நன்கு பழக்கமானவர். அவரிடம் சொல்லி, திருச்சி அரசு மருத்துவமனையில் நிரந்தர நர்சிங் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் கேட்டனர். வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து ரூ.4 லட்சத்தை கொடுத்தேன். ஆனால், திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக நர்ஸ் வேலை வாங்கித் தந்து ஏமாற்றிவிட்டனர். இதனால் லாசர், வீரமலை, சுப்ரமணியிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் 9 மாதமாகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து 2021 செப்டம்பர் 3ம்தேதி துவாக்குடி போலீசில் லாசர் உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories: