குஜராத் கடல் பகுதியில் ஊடுருவிய பாக். படகு: 11 பேர் சுற்றிவளைப்பு

அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் 11 கி.மீ. வரை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் இரவு கடலோர காவல் படையை சேர்ந்த ‘ஐசிஜி அங்கித்’ என்ற கப்பல், அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ‘யாசீன்’ என்ற பாகிஸ்தான் படகு, குஜராத் கடல் பகுதியில் 11 கிமீ வரை ஊடுருவி சென்று கொண்டிருந்தது. இதை கண்ட கடலோர காவல் படையினர். அதை சுற்றி வளைத்தனர். அதில், இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அந்த படகு போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டு, அதில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,’’ என்றார். கடந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி  குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், குஜராத் கடற்பகுதி வழியாக போதை மருந்துகள் கடத்தும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் 20ம் தேதி குஜராத் போலீசின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் கடலேரா காவல் படையும் இணைந்து நடத்திய சோதனையில் பாகிஸ்தானில் இருந்து மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டது.

Related Stories: