பழிவாங்கும் நோக்கத்துடன் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கலைக்க முயற்சிப்பதா? ஒன்றிய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. பிரதமரை கொல்வதற்கு சதித் திட்டம் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் நாடகமாகும். பிரதமரின் பஞ்சாப் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் விவசாயிகள் போராட்டம் அல்ல. அதற்கு மாறாக பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு 70 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பிரதமரின் வருகைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக 500 நாற்காலிகளில் தான் மக்கள் அமர்ந்திருந்தனர். மீதி நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள். எனவே, பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் அரசை கலைப்பதற்கான முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபடுவதை கண்டிப்பதோடு, உண்மை நிலையை உணர்த்தும் வகையில் ஆளுநருக்கு அனுப்ப கோரும் மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வருகிற 10ம் தேதிஅளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: