நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு: வெளிநடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை அதிமுகவின் நிலைப்பாடு என்று வெளிநடப்புக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின் ேபாது சென்னையில் பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டர்கள், போதுமான மருத்துவ வசதி போன்று அடிப்படை கட்டமைப்புகள் செய்து தரவில்லை.

வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசு தான் காரணம் என்று முதல்வர் கூறுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மே மாதமே ஆட்சி பொறுப்பேற்றார். வடகிழக்கு பருவமழை 10வது மாதத்தில் பெய்தது, 5 மாதம் இடைவெளி இருந்தது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஒவ்வொரு மண்டலத்திற்க்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்வார்கள். கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ெஜயலலிதா ஆட்சியில் இருந்த ேபாது வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் அப்போது ரூ.5 ஆயிரம் வழங்கப் பட்டது, நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

அதைப்போன்று கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.2500 வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அம்மா மினிகிளினிக் 2000 திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 1,900 மினி கிளினிக் திறக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அம்மா பெயரில் இருக்கிற இத்திட்டத்தை அரசியல் காழ்புணர்ச்சியோடு மூடியிருக்கின்றனர். தென்மேற்கு பருவமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அதற்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளது அதை  அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினோம். அதிமுக முன்னாள் அமைச்சர், நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுகின்றனர். நிர்வாகிகளை காவல் துறைக்கு அழைத்து சென்று 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் எங்கு அழைத்து செல்லப் படுகிறார்கள் என்றுகூட தெரியவில்லை. மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை அதிமுகவின் நிலைப்பாடு ஆகும். இவ்வாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Related Stories: