வத்திராயிருப்பு அருகே வழுக்கல் அருவியில் ஆனந்தக்குளியல்

வத்திராயிருப்பு : தாணிப்பாறை வழுக்கல் அருவியில் விழும் தண்ணீரில் பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோசத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.  கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தாணிப்பாறை வழுக்கல் அருவி வழியாக செல்கிறது. கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மூலிகைகள் நிறைந்து வரக்கூடிய தண்ணீரில் ஆனந்தக்குளியல் போட்டனர். தாணிப்பாறையை சுற்றுலாத் தலமாக அறிவிப்பு செய்து பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நாட்களில் குளியலில் குளித்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories: