நீடாமங்கலம் அருகே தண்டாலத்தில் 7 ஆண்டுகளாக திறக்கப்படாத பகுதிநேர புதியஅங்காடி கட்டிடம்-நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே தண்டாலம் கிராமத்தில் கட்டி 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பகுதி நேர அங்காடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சியில் ஒட்டக்குடி, பச்சைகுளம், நன்மங்கலம், தண்டாலம்,கிளியனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அங்காடியில் பொருள்கள் வாங்க தண்டாலம்,கிளியனூர் கிராமத்திலிருந்து சுமார் 5 கிமீ நடந்து வந்து ரிஷியூர் ஊராட்சியில் உள்ள அங்காடியில் பொருட்களை பல ஆண்டுகளாக வாங்கி செல்கின்றனர். இந்த பொருள் வாங்கி செல்வதற்குள் ஒரு நாள் ஆகி விடுகிறது.

இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாய கூலி வேலையை நம்பி உள்ளனர். ஒரு நாள் ஆவதால் பல்வேறு வேலைகள் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த பச்சைகுளம்,தண்டாலம்,கிளியனூர் பகுதியில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர்,நீடாமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தண்டாலத்தில் பகுதிநேர அங்காடி வேண்டும் என கோரிக்கை மனுக்களை அளிததனர். அதன் பேரில் அதிமுக ஆட்சியில் கடந்த 2014-2015ம் ஆண்டு பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தண்டாலத்தில் பகுதி நேர அங்காடிக்கான கட்டிடம் கட்டப்பட்டது. 7 ஆண்டுகளாக கட்டிடம் திறக்கப்படவில்லை.

பகுதி நேர அங்காடியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி உடனடியாக அ்ங்காடி கட்டப்பட்டு தயாராக உள்ள பகுதி நேர அங்காடி கட்டிடத்தை திறந்தும்,அங்காடியை செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: