சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம்!: உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு..!!

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் தீவுக்கு செல்லும் அனைவருக்கும் நாளை முதல் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெகட்டிவ் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு அந்தமான் செல்லும் 5 விமானங்களிலும் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், அகமதாபாத், கோவா, ஸ்ரீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான பயணம் மேற்கொள்வோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டு 15 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். அத்துடன் 48 மணி நேரத்திற்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் விமான பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: