முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய OBC அமைப்பினரை கைது செய்த போலீஸ்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து அமைப்பு தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கேட்டு முதலமைச்சர் சிவராஜ் சவுகான் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போபால் நகரில் முதல்வர் வீடு முன்பு திரண்ட பிற்படுத்தப்பட்டோர் மகா சபா நிர்வாகிகள் மக்கள் தொகையில் 50%- ற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பஞ்சாயத்து அமைப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டுமென்று முழக்கமிட்டனர். முதல்வர் வீடு முன்பு திரண்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் உடனிருந்தவர்களை போபால் விமான நிலையத்திலேயே காவல் துறையினர் கைது செய்துவிட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.       

Related Stories: