கொலராடோ காட்டுத் தீ ஆயிரம் வீடுகள் நாசம்

சுப்பீரியர்: அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் சுப்பீரியர் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீக்கு ஆயிரம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் நாசமாகியுள்ளன. மேலும் 3 பேர் காணாமல் போய் உள்ளனர். இது குறித்து கொலராடோ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராக்கி மலைகளின் அடிவாரத்தில் உள்ள புறநகர்ப்பகுதி சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென பரவியதில் சுப்பீரியர், போல்டர் கவுண்டியின் மார்ஷல் மேசா பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.

மேலும் நூற்றுக்கணக்கான கட்டிங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் 3 பேர் காணாமல் போய் உள்ளனர். காற்றால் தீ அதிக வேகமாக பரவி இருக்க கூடும். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இரவில் 20 செ.மீ பனி மூடப்பட்டது மீட்பு பணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. லூயிஸ்வில்லில் 553, சுப்பீரியரில் 332, கவுண்டியின் இணைக்கப்படாத பகுதிகளில் 106 வீடுகள் தீ விபத்துக்கு இரையானதாக தெரிய வந்துள்ளது’ என்றார். புத்தாண்டில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்க முகாம்கள் மூலம் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: