ரேஷன் அரிசி கடத்திய ஆந்திர வாலிபர் கைது: 21 டன் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில்  போலீசார் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது  லாரியில் 50 கிலோ எடை கொண்ட 420 மூட்டைகளில் மொத்தம்  21 டன் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஆந்திர மாநிலம், நெல்லூர் ஜில்லா, தரவாசத்திரம் மண்டலம், அக்கரைப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கைய்யா (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கும்மிடிப்பூண்டி தாலுகா, பஞ்சட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Stories: