சுற்றுச்சூழல் மாசை தடுக்க விழிப்புணர்வு!: பேருந்து மூலமும், நடந்தும் அலுவலகம் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இரண்டாவது வாரமாக பேருந்து மூலமும், நடந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கீழநாஞ்சில் நாடு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர் அரசு பேருந்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலமாக பயணித்தார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த அவர், கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரந்தோறும் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்து மூலமாகவோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள், மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுவலகம் வர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேருந்து மூலமும், நடந்தும் அலுவலகம் சென்றார். மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பேருந்தில் வருவதை கண்ட பொது மக்கள் பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

Related Stories: