செஞ்சுரியன் டெஸ்ட் 2ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து

செஞ்சுரியன்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடபட்டது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது. அகர்வால் 60, புஜாரா 0, கோஹ்லி 35 ரன்னில் ஆட்டமிழந்தனர். ராகுல் 122 ரன் (248 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்), ரகானே 40 ரன்னுடன் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருக்க, நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது.

இரவு பெய்த கனமழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஊழியர்கள் கடுமையாக முயற்சித்தும் களத்தை தயார் செய்ய முடியாததால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் 2ம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 3ம் நாளான இன்று இந்தியா முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாட உள்ளது.

Related Stories: