வாஜ்பாய் பிறந்த நாள் விழா: பாஜக தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 97வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றியுள்ள செழுமையான சேவைகளால் நாம் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவரது வளர்ச்சி முன்னெடுப்புகள் லட்சக்கணக்கான இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன’ என்று கூறினார். பிரதமரைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்தி மொழிப் புலமையால், எழுத்தாளரகவும் பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த வாஜ்பாய், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா’ உள்ளிட்ட நூல்கைளயும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: