ராஜபாளையம் அருகே மர்மநோய் தாக்கி ஆடுகள் பலி

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒவ்வொருவரும் தலா 100, 200 என ஆடுகள்  வளர்த்து வருகின்றனர்.

சமீபகாலமாக ஆட்டுக்கு அம்மை நோய் ஏற்பட்டு தினமும் 20 முதல் 30 வரை ஆடுகள் தொடர்ந்து இறந்து வருவதாக ஆடு வளர்ப்போர் வேதனையுடன் கூறுகின்றனர். கடந்த 10 நாட்களில் இப்பகுதியை கோபால், பாண், காளிமுத்து, காசி, முத்துராஜ், கணேசன் உட்பட ஆடு வளர்ப்போர் வளர்த்து வந்த 300க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: