தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி

புதுடெல்லி: தமிழகத்தில் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் என மொத்த 11 இடங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஜனவரியில் பிரதமர் மோடி அதனை திறப்பதற்காக தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருவண்ணாமலையில் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா மருத்துவக் கல்லூரி ஆகியவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தவும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த புதிய உத்தரவின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 20 ஆகவும், மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 57 ஆகவும் அதிகரித்துள்ளது.

Related Stories: