டிசம்பர் 28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை கல்விப் பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.!

சென்னை: டிசம்பர் 28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை கல்விப் பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி  இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்று.

பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய  பதவிகளுக்கு  மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்றும் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு online மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் online கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: