நாட்டுக்காக 32 குண்டுகளை ஏந்தியவர் பாக். போர் வெற்றி நிகழ்ச்சியில் இந்திரா காந்தி பெயர் மறைப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டை பிரித்து, பலவீனப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதற்கான 50வது ஆண்டு விழா, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. பேரணி நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: பொதுவாக இரு நாட்டுக்கும் இடையிலான போர் என்பது 6 மாதங்கள், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். அமெரிக்கா ஆப்கானிஸ்தானை  தோற்கடிப்பதற்கு 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் 13 நாட்களில் பாகிஸ்தானை இந்தியா அடிபணிய வைத்தது. இந்தியா ஒற்றுமையாக மற்றும் ஒன்றிணைந்து நின்றது தான் இதற்கு காரணமாகும். வங்கதேச போர் தொடர்பான வெற்றி விழா டெல்லியில் நடைபெறுகிறது. ஆனால் இந்த விழாவில்  இந்திரா பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர் இந்த நாட்டுக்காக 32 குண்டுகளை ஏந்தினார். ஏனென்றால் இந்த அரசு உண்மையை கண்டு பயப்படுகின்றது. பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்தி, பலவீனப்படுத்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories: