மின்னணு பரிமாற்றத்துக்கு ருபே கார்டு, பீம் யுபிஐ பயன்படுத்தினால் பரிசு

புதுடெல்லி: மின்னணு பண பரிமாற்றங்களை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, மக்கள் தற்போது ருபே டெபிட் கார்டு, பீம் யுபிஐ உட்பட பல்வேறு மின்னணு வசதிகளின் மூலம், வங்கிகளுக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ருபே டெபிட் கார்டு, பீம் யுபிஐ மூலமாக செய்யப்படும் பணப் பரிமாற்றங்களை ஊக்கப்படுத்த, இதை பயன்படுத்தும் மக்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, இந்தாண்டுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த  மின்னணு பரிமாற்றங்களுக்காக வசூலிக்கப்படும் பரிமாற்ற கட்டணங்களை, மக்களுக்கே ஒன்றிய அரசு திருப்பி அளிக்க உள்ளதாக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தெரிவித்தார்.  கடந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே ரூ.7.56 லட்சம் கோடிக்கான 423 கோடி மின்னணு பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: