ஐதராபாத்: நடிகை தீபிகா படுகோனுக்கு ஆந்திர சமையலின் தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினார், பிரபாஸ். அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக தீபிகா படுகோன் ஐதராபாத் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆந்திராவின் சிறப்பு உணவுகளை வழங்கி உபசரிக்கும் விதமாக தடபுடல் விருந்துக்கு பிரபாஸ் ஏற்பாடு செய்தார்.