மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி என்.சங்கரய்யாவின் சகோதரரும், எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் (80) மதுரையில் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று இவரது இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறைந்த என்.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர், எழுத்தாளர். கட்சியின் பிரபலங்களான ஜானகியம்மாள், சுந்தரைய்யா, ராமமூர்த்தி, ரணதிவே, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹரிகிஷன் சிங் சுர்ஜித், ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ஹரி கிருஷ்ணா, பசவப்புன்னையா ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி வெளியிட்டுள்ளார். கட்சி எம்பிக்களின் நாடாளுமன்ற பேச்சை, மொழிபெயர்த்து வழங்குவார்.