வருசநாடு பகுதியில் கரும்புகையை கக்கியபடி செல்லும் தனியார் பஸ்கள்-சுற்றுச்சூழலுக்கு மாசு: அதிகாரிகள் கவனிப்பார்களா

வருசநாடு : வருசநாடு பகுதியில் கரும்புகையை கக்கியபடி செல்லும் தனியார் பஸ்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு கிராமத்திற்கு தேனி, பெரியகுளம், மதுரை ஆகிய நகரங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

ஆனால், இந்த ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், கரும்புகையை கக்கியபடி செல்கின்றன. இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. கரும்புகையை கக்கியபடி செல்கின்றன. இதனால், பஸ்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கரும்புகையை சுவாசிக்கும் அவலம் ஏற்படுகிறது. மேலும், காற்று மாசு அடைகிறது.எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: