குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த முப்படை தலைமை தளபதி, வீரர்களுக்கு நெல்லையில் அஞ்சலி

நெல்லை :  குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு நெல்லையில் அதிமுக, காங்கிரசார் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறிய கோர விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவன், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிர்நீத்தனர். இவ்வாறு உயிர்நீத்தவர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது.

 நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சிந்து முருகன், காந்தி வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணியைச் ேசர்ந்த வை சின்னத்துரை, இளைஞர் பாசறை முத்துபாண்டி, ஜெ.,பேரவை நெல்லை பகுதி செயலாளர் சீனி முகமது சேட், விவசாய அணி கனித்துரை, அமைப்பு சாரா ஓட்டுநர் அணியைச் சேர்ந்த சிவந்தி மகாராஜன், வட்ட செயலாளர்கள் வண்ணை கணேசன், புதியமுத்து, ஜெய்வெங்கட், முடவன்குளம் ஜமீன் பாரதிராஜா, பேச்சிமுத்து, நெல்லை சுப்பையா, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

 இதே போல் காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் நடந்த வீரவணக்க நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுசெயலாளர் ராஜ் சரவணன், துணைத்தலைவர் கவிப்பாண்டியன், மண்டல தலைவர் ஐயப்பன், மாரியப்பன், ரசூல் மைதீன், கோட்டூர் முருகன், மாவட்டச் செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், கே.எஸ்.மணி, வரகுணன், பெருமாள், ஐஎன்டியுசி கண்ணன், மகாராஜன், கஸ்பார் ராஜ், சுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன், மகளிர் அணி அனீஷ் பாத்திமா, மெட்டில்டா, அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாரியப்பன், பட்டு, மாரிமுத்து, அய்யாத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

 இதே போல் பாளை சாரதா மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அதிகாரிகள், பேராசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்று, விபத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு  மலர்தூவி மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் செயல்படும் நெல்லை பாலர் வாடி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு தாளாளர் ரீனா துரை, தலைமை ஆசிரியை சங்கரி, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் முப்படை தலைமை தளபதியின் வாழ்க்கை வரலாற்றை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

 இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த  இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ  வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு நெல்லையப்பர் கோயிலில்  இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மேலும் அனைவரும் ஆன்மாவும் இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Related Stories: