அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு நீச்சல் போட்டி

அரக்கோணம்: இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 தேசிய பேரிடர் மீட்பு படை பட்டாலியன்கள் உள்ளது. இந்த பட்டாலியன்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து தலா 10 பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான ‘இன்டர்ஜோனல் நீச்சல்போட்டி’ அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இன்று நடந்தது. இப்ேபாட்டியை கமாண்டன்ட் கபில்வர்மன் மற்றும் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 40 மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா நடுவராக பங்கேற்றார்.

Related Stories: