சூலூரிலிருந்து கிளம்பிய விமானம் இரவு 7.40 மணியளவில் டெல்லியை அடையும்; 8.30 மணி முதல் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.! இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று  ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை  தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

இந்நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலை கொண்டு செல்லும் விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு 07.40 மணிக்கு சென்றடையும் என்றும் 08.30 மணி முதல் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் பிரிக் பிரிகேடியர் LS லிடர் ஆகியோர் உடல் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்படும்.

மீதமுள்ள வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி முடிவடையும் வரை சடலங்கள் இராணுவ மருத்துவமனையின் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடலும் ராணுவ மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும். இது குறித்து அவரவர் குடும்பங்களுடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: