ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 11 பேர் சடலமாக மீட்பு; எஞ்சிய 3 பேரின் நிலை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்: நீலகிரி ஆட்சியர்

நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எஞ்சிய 3 பேரின் நிலை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: