பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் குறித்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

ஜோலார்பேட்டை : .திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு விதங்களில் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கருதி சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் குழு அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  இதில், சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.பிரேமா ேபசியதாவது:-

அனைவரும் பயன்படுத்தும் மொபைல் மூலம் ஏடிஎம் கார்டு, கே.ஒய்.சி. இணைப்பு எனக்கூறி பொது மக்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஏமாற்றுவது,  சமூக வலைதளங்களில் ஆஃபர் மூலம் பொருட்கள் கொடுத்து ஏமாற்றுவது, போலியான இணையதளங்களில் க்யூ.ஆர். ஸ்கேன் செய்ய சொல்லி பண மோசடி செய்வது, குலுக்கல் பரிசு விழுந்துள்ளது, லாட்டரி விழுந்துள்ளது என்று மெசேஜ் லிங்க் மூலம் ஏமாற்றுவது.

ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடுவதன் மூலம் பண இழப்பு ஏற்படுவது, போலி நிறுவனங்கள் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தருவதாக கூறிய மாற்றுவது, முகநூலில் நட்பு வட்டாரங்கள் போல் போலியான பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றுவது, குறைந்த வட்டியில் அதிக பணம் தருவதாக லோன்ஸ் ஆக்ஷன் ஆகி இருப்பதாக கூறி கமிஷன் செலுத்தும்படி கூறி ஏமாற்றுவது, முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து ஓடிபி, வாட்ஸ்அப், பின் நம்பர் இவற்றை கொடுப்பதன் மூலம் வாட்ஸ்அப் ஹேக் செய்து ஏமாற்றுபவர்கள் உள்ளிட்ட குற்றங்கள் நடக்கிறது.

இதுதவிர, குறைந்த விலையில் கொரோனா சிகிச்சை கொடுப்பதாக கூறி பேங்க் அக்கவுண்ட் டீடைல் கேட்டும் ஏமாற்றுவது. ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது முன்பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்தால் டூப்ளிகேட் கார்டை நம்மிடம் கொடுத்து ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து ஏமாற்றுவது, முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்கள் மூலம் ஆபாச வீடியோக்களை ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் ஏமாற்றுவது என பல்ேவறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இது போன்று ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பாதிப்பை தவிர்க்கலாம்.  இவ்வாறு அவர் பேசினார்.

 இதனையடுத்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார்.

Related Stories: