முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸின் 4 மனுக்கள் தள்ளுபடி: வழக்கு விசாரணையை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்!!!

பெண் ஐ.பி.எஸ்  அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீதும், அவருக்கு உதவியதாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மீதும் தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது. வழக்கு விசாரணையின் போது  குற்றம்சாட்டபட்ட 2 பேரும் ஆஜர் ஆகவில்லை. அப்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதால் அதுவரை விசாரணையை தொடரகூடாது என ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த மனுவை  நீதிபதி நிராகரித்தார்.

மேலும் இந்த வழக்கின் முதல் 3 சாட்சிகளை தாங்கள் குறுக்கு விசாரணை செய்த பின்னரே மற்ற சாட்சிகளை  விசாரிக்க வேண்டும் என்ற 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கோபிநாதன் அன்றைய தினமே சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.  

Related Stories:

More