தமிழகத்தில் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்..!!

சென்னை: தமிழகத்தில் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அமைச்சர்கள் பலரும் தங்களுடைய பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை சார்பில் சென்னை, மதுரை, கடலூர், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மண்டலங்களில் இருக்கும் 11 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சுமார் 14 கோடியே 27 லட்சம் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் விருதாச்சலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அதோடு மட்டுமின்றி கருணை அடிப்படையில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: