இந்தியா கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டிய மருந்து நிறுவனத்திற்கு அனுமதி!: தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை..!! Jun 02, 2021 மராத்தா மருந்து நிறுவனம் கோவாக்சின் மத்திய அரசு மும்பை HPBCL மகாராஷ்டிரா மராத்தா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அரசு தின மலர் மும்பை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டியத்தில் உள்ள எச்.பி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறுத்தி வருகின்றனர். தடுப்பூசி விநியோகத்தில் பாரபட்சம் உள்ளதாக நீதிமன்றங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்தை மறு உற்பத்தி செய்ய மும்பையில் உள்ள HaffKine பயோ பர்மா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 22.8 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக HaffKine நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியர்களிடையே பேசிய அவர், கோவாக்சின் மருந்தினை தயாரித்து வழங்க தயாராக இருப்பதாக திட்ட அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்து இருந்தோம். உரிய நிதி கிடைத்தால் தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறி இருந்தோம். இந்நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. கோவாக்சினை தயாரிப்பது குறித்து தற்போது பாரத் பயோடெக்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்த உடன் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி மருந்து தயாரிப்பு பணி நடைபெறும் என்று குறிப்பிட்டார். முழு வீச்சில் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு 65 கோடி ரூபாயும், மராட்டிய அரசு 93 கோடி ரூபாய் நிதியும் வழங்கியிருப்பதாக சந்தீப் ரத்தோர் கூறியிருக்கிறார். தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருக்கும் சந்தீப், அடுத்த 8 மாதங்களில் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். … The post கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டிய மருந்து நிறுவனத்திற்கு அனுமதி!: தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை..!! appeared first on Dinakaran.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்
பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!
கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்.. பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, ED முகங்களில் விழுந்த அறை என அரசியல் தலைவர்கள் விமர்சனம்!!
இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் குறித்து விவாதிக்க வேண்டியது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி
உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் சாடல்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் :தேர்தல் பரப்புரைக்கு அனுமதி, முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபட அனுமதி மறுப்பு!!
நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது: டெல்லி அமைச்சர் கோபால்ராய் மகிழ்ச்சி
கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு
100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.25,000 திருமண உதவித்தொகை : பிஜூ ஜனதா தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்கும் திராவிட மாடல்