திட்டக்குடி வேலைவாய்ப்பு முகாமில் 570 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வெ கணேசன் வழங்கினார்

திட்டக்குடி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடியில் நடந்தது. கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இந்த முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 5 ஆயிரத்து 538பேர்கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட 570 பேருக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார். 938 நபர்கள் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories:

More