தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசித் தாக்கியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களுக்கு  பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதற்கு காரணமான இலங்கை கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Related Stories:

More