முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு தமிழக ஆளுநர், கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தமிழகம் மற்றும் கர்நாடக முன்னாள் ஆளுநருமான ரோசய்யாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஆந்திர மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை 6 முறை தாக்கல் செய்து, தனது திறமையால் அனைவராலும் அறியப்பட்டவர். அடக்கமானவராகவும், பக்திமானாகவும் விளங்கியவர். அவரின் இழப்பு ஆந்திராவுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோல, தெலங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ்,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், வி.கே.சசிகலா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் ரோசய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Related Stories:

More